இன்று நடப்பது ஆட்சி கவிழ்ப்பு போராட்டம் அல்ல: மொட்டு கட்சி விளக்கம்!

நுகேகொடை கூட்டம் தொடர்பில் அரசாங்கம் அஞ்சுகின்றது. எதிர்பார்த்ததைவிடம் அதிகளவானோர் இதில் பங்கேற்பார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தியால் நாட்டு மக்களுக்கு பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவற்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே நாளை நுகேகொடை கூட்டம் நடக்கின்றது.

எனினும் இந்த நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அஞ்சியுள்ளது. அதனால்தான் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன்மூலம் எமக்கு சிறந்த பிரச்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்பார்த்த அளவைவிடவும் கூடுதல் மக்கள் இதில் பங்கேற்பார்கள்.

இது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றகோரும் பேரணியாகும். ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என நம்புகின்றோம்.” எனவும் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

Related Articles

Latest Articles