தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சபாநாயகரிடம் இன்று முறையிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பியே இவ்விடயத்தை அர்ச்சுனா சுட்டிக்காட்டி இருந்தார்.
“ சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.
எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றேன். அங்கு வைத்து புத்தளம் மாவட்ட எம்.பி. பைசல் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தார். கமரா இருந்தது. அதில் இது பதிவாகி இருக்கும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார் அர்ச்சுனா எம்.பி.
“ எனக்கு சாவதற்கு பயணம் இல்லை. ஆனால் மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தான் எவரையும் மிரட்டவில்லை எனவும், உறுப்பினர் பொய்யுரைக்கின்றார் எனவும் ஆளுங்கட்சி எம்.பியான பைசல் தெரிவித்தார்.










