அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் இலங்கை விஜயம்!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இன்று இலங்கை வருகின்றார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வரும் உதவி இராஜாங்க செயலர் ஹூக்கர் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பு தொடர்கின்றது.

இதன்மூலம் சுதந்திரமான, திறந்த மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை முன்னேற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம் என்றும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles