பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர கொடையை வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.
அனைத்துலக உதவி நிறுவனங்கள் மூலம் , உணவு மற்றும் ஏனைய அன்றாடத் தேவைகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க வழங்க இந்த அவசர நிதிக் கொடை பயன்படுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீட்டெடுப்பதற்கும் மீளக்கட்டியெழுப்பவும் எமது நீண்டகால நண்பரான சிறிலங்காவுக்கு தொடர்ந்து தடையற்ற ஆதரவை வழங்க ஜப்பான் விரும்புவதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் மொடேகி டோக்கியோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சுமார் இரண்டு வாரங்களில் 1,250 சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், 30 பேர் கொண்ட ஜப்பானிய பேரிடர் நிவாரண மருத்துவக் குழு, நேற்று சிறிலங்காவில் இருந்து திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.










