டித்வா புயலால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
இவர் பொருளாதார நிபுணர் என்பதுடன், நிழல் நிதி அமைச்சராகவும் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பே பேரிடர் இழப்பு பற்றி சரியான தகவலை குறிப்பிடலாம்.
எனினும், 3 முதல் 4 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கணிப்பாகும்.
மொத்த தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு கணித்தால் இழப்பு 3 சதவீதமாக அமையும்.” எனவும் கலாநிதி ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பேரிடரால் 6 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளமை தெரிந்ததே.
