“ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே, இரு தரப்பு இணைவுக்கு நான்தான் தடையாக உள்ளேன் எனில், எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக தயார்.”
இவ்வாறு ஐதேகவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி, தலைமைப் பதவியை சஜித்தோ அல்லது வேறு எவரிடமோ கையளிக்க வேண்டும் என செயற்குழு தீர்மானித்தால் அதற்கேற்ப செயல்பட தயார்.
இந்நாட்டில் அரசியலில் வகிக்ககூடிய உயர் பதவிகளை வகித்தவிட்டேன். எனவே, எனக்கு விட்டுக்கொடுப்பு என்பது பெரிய விடயம் அல்ல.” எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.










