தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? இந்த பிரச்சினை முறையாக நிர்வகிக்கப்படாவிட்டால் தேயிலை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேயிலை ஏற்றுமதியாளர்களின் களஞ்சியசாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியதால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்றுமதியாளர்கள் இதிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? சிலர் காப்புறுதி செய்துள்ள போதிலும், துரதிஷ்டவசமாக காப்புறுதி திட்டங்களை செய்யவில்லை. சில காப்புறுதி நிறுவனங்களின் கொள்கைககளில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது அரசாங்கத்துக்குள்ள பாரிய சவாலாகும். ஆனால் இவ்வாறான துறைகளுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கை கொடுத்தால், அரசாங்கத்துக்கு அந்த சுமையை ஏற்க வேண்டியேற்படாது. எனினும் காப்புறுதி நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இதுவரை காப்புறுதி நிறுவனங்களுக்கு 37 பில்லியன் வரையாக கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தொகையை காப்புறுதி நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என்பது அடுத்த பிரச்சினையாகும்.
காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு எவ்வாறு எந்த இழப்பீட்டைப் பெற்றுக் கொடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்த தொழிற்துறையினருக்கு இழப்பீட்டுடன் மிகக் குறைந்த வட்டியில் 10 இலட்சம் வரையில் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படும். திறைசேரியில் போதுமானளவு நிதி காணப்படுகிறது. எனவே நிதி பற்றாக்குறை எனக் கூடி இதனை தட்டிக்கழிக்க முடியாது. ” என்றார்.










