ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் ஜனவரி முற்பகுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதமே புதுடெல்லி செல்வதற்கு ரில்வின் சில்வா திட்டமிட்டிருந்தார். எனினும், டித்வா புயல் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் அவரது பயணம் பிற்போடப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி மாதம் செல்வதற்குரிய ஏற்பாடு இடம்பெறுகின்றது.
இவ்விஜயத்தின்போது இந்தியாவின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் பேச்சு நடத்துவார்.










