மக்கள் எங்கள் பக்கம்: என்பிபி அரசை அசைக்க முடியாது!

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவரும்போது, இரு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என சஜித் பிரேமதாச கூறினார். அதன் பின்னர் ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் எனக் குறிப்பிட்டார்.

ஆனால் ஒருவருடம் கடந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் அடுத்த இரண்டு பூரணை தினங்களுக்குள் ஆட்சி கவிழுமாம்.

இது மக்களின் அரசாங்கம், மக்களால் அரசாங்கம் பாதுகாக்கப்படும். எதிரணிகள் கூறுவதுபோல இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். எனவே, எமக்கு எவ்வித அச்சமும் இல்லை.” – என்றார்.

ஊடக நிறுவனங்கள்மீது கடந்தகாலங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.
இவ்வாறு ஊடக நிறுவனங்களை கொளுத்தியவர்கள்தான் இன்று ஊடக சுதந்திரம் பற்றி கதைக்கின்றனர். இது நகைப்புக்குரிய விடயமாகும்.

ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதற்குரிய முழு உரிமையும் உள்ளது. அதில் நாம் தலையிடமாட்டோம். கடந்த காலங்களின்போது செய்திகளில் தணிக்கையும் இடம்பெறாது எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles