முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள செல்வாக்கு அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
“மஹிந்த ராஜபக்சவுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அவ்வாறே உள்ளது. ஆனால் அவருக்கு உள்ள செல்வாக்கு அவரின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு இல்லை.ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இல்லை.
நாமல் ராஜபக்ச வேகமாக வளர்ந்துவரும் அரசியல்வாதியாக இருந்தாலும் தனித்து சென்று சாதிக்க முடியாது. அடுத்த தேர்தலில் எதிரணிகள் ஒன்றுபடாவிட்டால் அடுத்த தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிபெறும்.
அடுத்த ஜனாதிபதி என்ற சிந்தனைக்கு அப்பால் அடுத்து அமையும் அரசாங்கத்தின் தலைவர் என்ற எண்ணத்துடன் நாமல் செயல்பட்டால் நல்லது.










