அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவிநாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை, கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
பொங்கலை முன்னிட்டு இப்படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நபா நடேஷின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.
“இந்தியாவின் பழமையான விஷ்ணு கோயில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் திரைக்கதை அமைப்பைக் கொண்டுள்ளது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.










