கிரீன்லாந்து விவகாரம் தொடர்பில் இவ்வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.
ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 நாடுகள் மீது கூடுதல் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் மார்க் ரூட் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“ கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேசினேன். அப்போது கிரீன்லாந்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தேன்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்தோம். இந்த வாரம் டாவோசில் ஜனாதிபதி டிரம்பை சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.
