50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது

 25,000 ரூபா கொடுப்பனவு 97% நிறைவு
 பாடசாலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் 73% ஆகும்
 சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சியாளர்களை மீட்டெடுக்க தலா 02 இலட்சம் ரூபா உதவித்தொகை

டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு வழங்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, டித்வா சூறாவளியின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக சமையலறை உபகரணங்கள் கொள்வனவிற்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவில் தற்போது 70% வழங்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களில் மொத்தம் 156,805 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவுக்காகக் கணக்கிடப்பட்டதுடன், அவற்றில் 109,512 குடும்பங்களுக்கு இதுவரை குறித்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் 1,191 குடும்பங்கள் இந்த உதவித்தொகையைப் பெற தகுதி பெற்றிருந்ததுடன், அந்த அனைத்து குடும்பங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாத்தளை மாவட்டத்தில் 1,253 குடும்பங்களில் 1,143 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், அது 91% முன்னேற்றம் ஆகும். கண்டி மாவட்டத்தில் 8,409 குடும்பங்களில் 7,083 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அது 84% முன்னேற்றம் ஆகும்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க கணக்கிடப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ரூபா 50,000 கொடுப்பனவு 98% வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 99% பயனாளிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் 91% வீதமானவர்களுக்கும், அநுராதபுர மாவட்டத்தில் 84% பயனாளிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் 93% பயனாளிகளுக்கும் உதவித்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்திற்குப் பின்னர் வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபா உதவித்தொகையை செலுத்துவதில் மொத்த முன்னேற்றம் 97% ஆகும்.

25 மாவட்டங்களில் 435,104 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றிருந்ததுடன், அவற்றில் 422,900 குடும்பங்களுக்கு இதுவரை இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தகுதிபெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதில் 99% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 95%, யாழ்ப்பாண மாவட்டத்தில் 88%, மன்னார் மாவட்டத்தில் 94%, வவுனியா மாவட்டத்தில் 99%, முல்லைத்தீவு மாவட்டத்தில் 98%, மட்டக்களப்பு மாவட்டத்தில் 98%, திருகோணமலை மாவட்டத்தில் 98%, குருநாகல் மாவட்டத்தில் 98%, புத்தளம் மாவட்டத்தில் 97%, அநுராதபுர மாவட்டத்தில் 98%, பொலன்னறுவை மாவட்டத்தில் 97%, இரத்தினபுரி மாவட்டத்தில் 99% மற்றும் கேகாலை மாவட்டத்தில் 90% ஆகிய பகுதிகளுக்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபா உதவித்தொகை கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படம் 10,000 ரூபா கொடுப்பனவும் இந்நாட்களில் வழங்கப்படுகிறது.

நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்து 186,893 மாணவர்கள் 15,000 ரூபா உதவித்தொகையைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 136,994 மாணவர்கள் இதுவரை அந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, எஞ்சியுள்ளவர்களுக்கான குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதோடு, அதற்காக அரச பொறிமுறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட “டித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட 6370 தொழில்துறை உரிமையாளர்களின் தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதுடன், ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் தலா 200,000 ரூபா கொடுப்பனவை 5034 விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவதற்காக 1,006,800,000 ரூபா நிதி ஒதுக்கீட்டை மாவட்ட செயலகங்களுக்கு அமைச்சு வழங்கியுள்ளது.

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டம், கடந்த ஜனவரி 09 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டது.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், அனர்த்தத்தால் முற்றிலுமாக வீடுகளை இழந்த, மீண்டும் அதே இடத்தில் தமது வீடுகளை நிர்மாணிக்க முடியுமான குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு வீட்டிற்கும் 50 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது.

அதே பகுதியில் மீள்குடியேற்றம் பொருத்தமானதல்ல என்று அறிவுறுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கத் தேவையான காணிகளை அடையாளம் காணும் பணியையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகள் உட்பட நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகள் நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம், ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பயிர் சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதும் செயற்திறனுடன் தந்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகள் குறித்த சரியான தரவு சேகரிக்கப்பட்டு, வழங்கப்பட வேண்டிய இழப்பீடு கணக்கிடப்படுகிறது.

அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்வை மீட்டெடுப்பதில், முன்பு இருந்ததை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த நிலைக்கு மேம்படுத்தும் வகையில் இந்தப் பணிக்ளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி, முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்துடன், இந்நாட்டின் வரலாற்றில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles