வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார், சிலம்பரசன். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக இது உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார்.
இப்படத்துக்கு ‘காட் ஆஃப் லவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிலம்பரசன் ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றன.










