கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.
கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்திலுள்ள கிராம பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அரசுக்கு சொந்தமான Satena என்ற விமான சேவை நிறுவனமே குறித்த விமான சேவையை வழங்கியுள்ளது.
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்பதை கொலம்பியாவின் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானம் பயணத்தை ஆரம்பித்து 12 நிமிடங்களில் தொடரை இழந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
விமான விபத்து இடம்பெற்ற கொலம்பியா – வெனிசுலா எல்லைப் பகுதியானது நாட்டு இராணுவத்துக்கு எதிராக சட்டவிரோத ஆயுத குழுக்கள் செயல்படும் பகுதியெனவும் தகவல் வெளியாகியுள்ளது.
13 பயணிகளும், இரு விமான அதிகாரிகளும் விமானத்தில் இருந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 36 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.










