19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கைநேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் சந்திக்கவில்லை. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.
இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.
இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. ஆனாலும் போட்டி உள்ளூரில் நடப்பதால் இந்தியா மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
