ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா இலங்கை?

டி-20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரவு 7 மணிக்கு கண்டி, Pallekele International Cricket Stadium மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான மோதலாகக் கருதப்படுகிறது.

நடப்பு உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதனால் அணியின் நம்பிக்கை உச்சத்தில் உள்ளது.

இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால், இலங்கை அணி நேரடியாக சுப்பர்-8 சுற்றுக்குள் தகுதி பெறும். இதனால், சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபுறம், உலக கிரிக்கெட்டின் பலம்பொருந்திய அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா, தனது முந்தைய போட்டியில் Zimbabwe அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இதனால், சுப்பர்-8 சுற்றுக்கான வாய்ப்பை உயிருடன் வைத்திருக்க ஆஸ்திரேலியா அணிக்கு இன்றைய வெற்றி கட்டாயமாகியுள்ளது.

இன்றைய இலங்கை-ஆஸ்திரேலியா மோதல், உலகக்கிண்ண தொடரின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles