“ ஜனாதிபதி தேர்தலின்போது நாமல் ராஜபக்ச சிறை வைக்கப்படுவாரானால், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வென்றவர் என்ற சாதனையை அவர் படைப்பார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மக்கள் ஆதரவு எமது பக்கம் திரும்புவதால் நாமல் ராஜபக்சவை எப்படியாவது உள்ளே (சிறைக்குள்) போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாம் எதற்கும் தயார், நாமலை சிறையில் அடைத்தாலும் வெளியில் இருந்து நாம் செயல்படுவோம்.
ஜனாதிபதி தேர்தல் நடக்கும்போது நாமல் சிறையில் இருந்தால் நிச்சயம் அவர் வெற்றிபெறுவார். சிறையில் இருந்து ஜனாதிபதி தேர்தலை வென்றவர் என அவர் வரலாற்றில் இடம்பிடிப்பார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மொட்டு கட்சியின் பலம் தெரியவரும்.”- என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.










