நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இலங்கை?

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 கட்டத்தில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (25) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ரசிகர்களின் உற்சாகக் குரலால் அரங்கமே அதிரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒரு தோல்வி ஏற்பட்டால், உலகக்கிண்ண கனவு இத்துடன் முடிவடையும் அபாயம் நிலவுகிறது.

மறுபுறம், நியூசிலாந்து அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளது. இரு அணிகளின் பந்துவீச்சும் துடுப்பாட்டமும் இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இன்றைய ஆட்டத்திலும், அடுத்ததாக நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். அதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய மோதல், இலங்கைக்கு சாதாரண போட்டியல்ல — உலகக்கிண்ண பயணத்தை நிர்ணயிக்கும் “வாழ்வா? சாவா?” எனும் தீர்மான தருணமாகவே பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles