வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார்.
இன்று முதல் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை ஜெர்மனிக்கும், மார்ச் 1 ஆம் திகதி முதல் ருமேனியாவிற்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன்-ஆசிய பசுபிக் வணிக சங்கத்தின் பிரெமன் பிரிவினால் வழங்கப்பட்ட அழைப்பின் பேரில், வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பார்.
இந்தப் பயணத்தின் போது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல்லுடன், அமைச்சர் விஜித ஹேரத் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதையடுத்து, மார்ச் 1 ஆம் திகதி முதல் 3 ஆம்திகதி வரை வெளிவிவகார அமைச்சர், ருமேனியாவுக்கு பயணம் மேற்கொள்வார்.
அவர் ருமேனியாவின் வெளியுறவு, தொழிலாளர், குடும்பம், இளைஞர் மற்றும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல், தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலா அமைச்சர்களுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களை நடத்துவார்.
தொழிலாளர் துறையில் ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் இதன் போது கையெழுத்திடப்படவுள்ளது.










