வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு பெருந்தொகையான பணப்பரிசு!

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் (BCCI) பெருந்தொகையான பணப்பரிவு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நாணய மதிப்பில் 131 கோடி ரூபா பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பரிசுத் தொகையை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்ற 15 வீரர்கள் ஒவ்வொருக்கும் தலா 6 கோடி ரூபா வீதம் கிடைக்கப்பெறும்.

மீதமுள்ள 41 கோடி ரூபா பயிற்சியாளர் குழு மற்றும் அணியின் இதர குழுவினருக்கு வழங்கப்படவுள்ளது.

கடந்த 2024-ல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அணிக்கு 125 கோடி ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Related Articles

Latest Articles