ஈரான் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தலைவர்கள் தங்கள் மக்கள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி தயங்குவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலை ஒரு இராணுவ நடவடிக்கையாக விவரித்த அவர், ஈரானின் அணுஆயுதத் திட்டத்தை உலக அமைதிக்கு எதிரான ஒரு புற்றுநோய் என விமர்சித்தார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் உலகைப் பாதுகாப்பதாக அவர் வாதிட்டார்.
ஈரானின் செல்வாக்கை முற்றிலுமாக அழிப்பதே தனது நோக்கம் என்பதை அவர் தனது உரையின் மூலம் தெளிவுபடுத்தினார்.ர்.










