மக்களை வாழ வைக்க முடியாவிட்டால் ஆட்சி எதற்கு?

நாட்டில் அதிகரித்துள்ள கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றும், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளால் மக்கள் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.

அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள விகாரைகளுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இன்று மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். மக்களின் இந்த அவல நிலைக்கு அரசு எப்போது தீர்வை வழங்கப்போகின்றது?

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகள் நடக்கவில்லை என அரசு முதலில் கூறியது. பின்னர் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. கணக்காய்வாளர் அறிக்கையின் மூலம் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த மோசடிகளால் ஏற்பட்டுள்ள நட்டத்தை அரசு மறைமுகமாக மக்கள் மீதே சுமத்தி வருகின்றது.

தரமற்ற நிலக்கரியால் போதிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாதுள்ளது. இதனால் டீசல் மின் நிலையங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற வேண்டியுள்ளது. நிலக்கரியை விட டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக செலவாகும். இந்த மேலதிகச் செலவு இறுதியில் மின்சாரப் பாவனையாளர்கள் மீதே சுமத்தப்படுகின்றது. 75 இலட்சம் மின் பாவனாளர்கள் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகளை உடனடியாகக் குறைத்து, மக்கள் வாழக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். மக்களை வாழ வைப்பதே ஓர் அரசின் பிரதான பொறுப்பாகும்.

மக்களைக் காக்கும் பொருட்டு அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles