வழமைக்கு திரும்புகிறது ஹார்முஸ் நீரிணை: பாதுகாப்பாக கடந்து சென்றது முதல் சுற்றுலாக் கப்பல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாக ஒரு சுற்றுலா கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதற்கு ஈரான் இணங்கிய நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பான பயணம் இடம்பெற்றுள்ளது.

செலஸ்டியல் டிஸ்கவரி என்ற பெயருடைய இந்த கப்பல், துபாயில் சுமார் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்த பிறகு தற்போது ஓமானை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

கப்பல்களைக் கண்காணிக்கும் MarineTraffic தளம், இந்தப் பயணத்தின் போது கப்பலில் பயணிகள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்ட பின்னர் உலகளவில் ஏற்பட்ட நெருக்கடி நிலை படிப்படியாக தளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles