ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
இந்நிலையில் ‘போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?’ என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர்,
“ ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, 22 ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் இந்த இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்.
மீண்டும் குண்டுகளை வீச வேண்டி இருக்கும். போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஈரான் உடனான திரை மறைவு பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அமெரிக்க அரசு தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.










