இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (19) இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று, கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளுக்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துகளையும் ஆழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மிகவும் விலைமதிப்பற்றவை. அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அவரது குழுவினர் இக்காலகட்டத்தில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் துரித செயல்பாடுகளை நான் பாராட்டுகிறேன்.
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மலையகச் சமூகம் மற்றும் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கும் பல அழுத்தமான சமூக-பொருளாதார மற்றும் மேம்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் இந்தியாவுடனான நீண்டகால உறவுகளால் பிணைக்கப்பட்ட இச்சமூகங்களுக்கு, நிலையான வளர்ச்சி, உள்ளடக்கம் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்த இலக்கு வைக்கப்பட்ட கொள்கை ஆதரவும் மேம்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பும் அவசியமாகும்.
1. மலையக சமூகத்திற்கான இந்திய வெளிநாட்டு குடியுரிமை வசதி
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலானோர், முறையான பூர்வீக ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் இந்திய வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் சவால்களை எதிர்கொள்கின்றனர். எனவே நாம் பின்வருவனவற்றை கோருகிறோம்: நெகிழ்வான மற்றும் மாற்று ஆவணக் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்வது.வரலா ரீதியாக இடம்பெயர்ந்த சமூகங்களுக்காக ஆவணத் தேவைகளில் தளர்வுகளை அனுமதிக்கும் ஒரு சிறப்பு வசதி பொறிமுறையை நிறுவுதல்.
2. மருந்தாக்கத் துறை ஒத்துழைப்பு பின்வருவனவற்றில் இந்தியாவின் ஆதரவை நாங்கள் முன்மொழிகிறோம்:
82
இலங்கையில் குறைந்த விலையில் மருந்து உற்பத்தியை நிறுவுதல்.அத்தியாவசிய மருந்துகளை மானிய விலையில் அல்லது சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வசதி செய்தல்.
3. ஆடை உற்பத்தி தொழில்கள் வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தல்.
மலையக மாவட்டங்களில் இந்திய ஆதரவுடன் கூடிய ஜவுளி உற்பத்தித் தொழிற்சாலைகளை உருவாக்குதல்.திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இந்திய ஜவுளி மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைத்தல்.
4. காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயம் மலையகப் பிராந்தியங்களின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொள்ளல்
மலையகத்தில் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய மற்றும் அதிக விளைச்சல் தரும் பயிர் வகைகளை அறிமுகப்படுத்துதல். நிலையான, மீளுருவாக்கம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு.
5. குளிர் சேமிப்பு மற்றும் விவசாய-தளவாட உள்கட்டமைப்பு அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தல்,
நாடு முழுவதும் நவீன குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த தளவாட வலையமைப்புகளை நிறுவுதல்.விவசாய கூட்டுறவுச் சங்கங்கள், குறுந்தொழில்கள் மற்றும் விவசாய மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துதல்.
6. இந்திய வம்சாவளி சமூகங்களுக்கான வீட்டு வசதி விரிவாக்கம் இலங்கையில் வீட்டுவசதித் துறையில் இந்தியா பாராட்டுக்குரிய பங்களிப்புகளைச் செய்துள்ள போதிலும், இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது.
82 தற்போதுள்ள இந்திய நிதியுதவியுடன் கூடிய வீட்டுத்திட்டங்களை 200,000 குடும்பங்களுக்கு விரிவுபடுத்துதல். நிரந்தரமான, கண்ணியமான மற்றும் சமூகம் சார்ந்த வீட்டுத் குடியேற்றங்களை உருவாக்குதல்.
7. தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்தல், இளைஞர்களை
மலையக மற்றும் கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப மையங்கள், டிஜிட்டல் பயிற்சி மையங்கள் மற்றும் புத்தாக்க ஆய்வகங்களை நிறுவுதல்.இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு.
8. மீனவ சமூகங்களுக்கான வாழ்வாதார மேம்படுத்தல்,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள், நிலையான நடைமுறைகள் மற்றும் மதிப்புச் சங்கிலி அணுகலை அறிமுகப்படுத்துவதற்கான கூட்டுத் திட்டங்கள்.கடலோர வாழ்வாதார மேம்பாடு மற்றும் மீள்தன்மைக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி.
9. கல்வி மேம்பாடு இன்றைய வாழ்க்கைச் செலவு மற்றும் கல்விக்கட்டணங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரித்தல்.கிராமப்புற பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை தரம் உயர்த்துதல்.
10. இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக, இந்தியாவில் பிறந்த குழந்தைகளுடன் நிரந்தரமாக அங்கேயே இணைய விரும்பும் தகுதியுள்ள நபர்களுக்கு இந்தியக் குடியுரிமைக்கான ஒரு முறையான மற்றும் மனிதாபிமான பாதையை உருவாக்குதல்.அல்லது, இலங்கைக்குத் திரும்ப விரும்புவோருக்கு: விரிவான நாடு திரும்புதல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் அவர்கள் மீளக்குடியேறும் பகுதிகளில் வாழ்வாதார மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான ஆதரவை வழங்குதல்.
11. சுகாதார காப்பீடு மற்றும் சுகாதார அணுகல்ளுக்காக, ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற முன்முயற்சிகளின் அடிப்படையில் 500,000 மக்களுக்கு மலிவு விலை இந்திய ஆதரவு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களை லங்கா எல்.ஐ.சி ஊடாக மலையக சமூகங்களுக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்துதல்.தோட்டத்துறைக்கு சுகாதாரச் சேவைகளைத் திறமையாக இணைக்கும் சிறிய ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்குதல்.
12.சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்குத் திரும்பிய குடும்பங்களுக்கான வீட்டு வசதி வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு நீலகிரி மாவட்டம் மற்றும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவின் ஏனைய மலையகப் பகுதிகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினர் பலர் இன்னும் தற்காலிக குடியிருப்புகளிலேயே வசிக்கின்றனர்.
இவ்வொப்பந்தத்தின் கீழ் நாடு திரும்பிய குடும்பங்களுக்குச் சிறப்பு வீட்டுவசதி முறைப்படுத்தல் மற்றும் உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.தகுதியுள்ள பயனாளிகளுக்கு நில உரிமங்கள் மற்றும் நிரந்தர வீடுகளை ஒதுக்கீடு செய்தல்.இந்த முன்முயற்சியானது, இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இடம்பெயர்ந்து இந்தியாவின் தோட்டப் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றிய சமூகங்களுக்கான அங்கீகாரமாகவும் சமூக மேம்பாடாகவும் அமையும்.
இந்த முன்மொழிவுகள் இந்திய வம்சாவளி மற்றும் தமிழ் பாரம்பரிய சமூகங்களின் நலன் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைந்தவையாகும். இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஏற்கனவே புதுடில்லியில் உங்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் தொடர்ச்சியாகவே இதையும் சமர்ப்பிக்கின்றேன்.
தங்களின் வழிகாட்டுதலின் கீழ் இவ்விடயங்கள் விரைவில் உரிய பரிசீலனையைப் பெறும் என்று நான் நம்புகிறேன் என்றுள்ளது.










