செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அகழ்வுப் பணிகளுக்கான நிதி விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

சுமார் எட்டு வார காலப்பகுதிக்கான அகழ்வுப் பணிகளுக்காகச் சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மதிப்பீட்டுத் திட்டத்துக்கு நீதி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதுடன், அதற்கான நிதியையும் விடுவித்துள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு அழைத்து, அன்றைய தினமே களத்தில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதென நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அகழ்வுப் பணிகளைச் சுமுகமாகவும் திட்டமிட்டபடியும் முன்னெடுப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகள் குறித்த தரவுகள் வருமாறு:-

* முதலாம் கட்டம்: 9 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
* இரண்டாம் கட்டம்: 45 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
* மொத்த நாட்கள்: இதுவரை 54 நாள்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது.

* கண்டெடுக்கப்பட்டவை: தடயவியல் அகழ்வாய்வுத் தளங்கள் ஒன்று  மற்றும் இரண்டிலிருந்து இதுவரை 240 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

* மீட்பு: அடையாளப்படுத்தப்பட்டவற்றில் 239 மனித என்புத் தொகுதிகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வின் மூலம் மேலதிக உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles