எல்ல நகரில், 2 கோடி ரூபா மதிப்பில் விற்கத் தயாராக இருந்த “கஜமுத்து” (யானை முத்து) ஒன்றுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்
ஹப்புத்தலை விசேட அதிடிப்படைனருக்கு
கிடைத்த இரகசிய தகவலின் பேரில் எல்ல நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து கஜ முத்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன் போது சந்தேக நபரான
20 வயதுடைய பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் ஹப்புத்தளை விசேட அதிரடி படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கஜமுத்தை ரூபாய் 2 கோடிக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக எல்ல வனஜீவி அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக எல்ல வனஜீவி அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்
R T பசறை










