” 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படும்” – என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டியில் இன்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
” பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நிதி அமைச்சின் வெளிநாட்டு மூலவளத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பாக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
