நாம் நீலகாமம் போராட்டத்துக்கு வலுக்கிறது பேராதரவு! கிழக்கு பல்கலையில் இருந்தும் நேசக்கரம்!!

கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் பேராதரவை வழங்கியுள்ளது.

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தால் ஏவப்பட்ட குண்டர் குழுவால் நடத்தப்பட்ட தாக்குதலையும் மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

மலையக மக்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான காணி உரிமை என்பவற்றுக்கான அறவழிப்போராட்டத்துக்கு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் துணை நிற்கும் எனவும் குறித்த ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் நீலகாமம் அறவழிப் போராட்டத்துக்கு பேராதரவு பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles