மலையகத்தில் மாலைவேளையில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மலையகத்தில் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி உட்பட பல மாவட்டங்களில் மாலைவேளையில் கடும் மழை பெய்துவருகின்றது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றது.

மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் வெட்டவெளிகளில் நிற்பதைத் தவிர்க்குமாறும், மின்சாதனங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடும் மழை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுகின்றன. அத்துடன் சில இடங்களில் பனிமூட்டம் நிலவுவதால் வீதிப் புலப்பாடும குறைவடைந்துள்ளது.

எனவே, மலையக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சில பகுதிகளில் பிற்பகல் முதலே மழை பெய்துவருகின்றது.

 

 

Related Articles

Latest Articles