“தைவானால் எமக்கிடையே மோதல் ஏற்படக்கூடும்” ட்ரம்பிடம் நேரில் தெரிவித்த சீன ஜனாதிபதி

தைவான் விவகாரத்தை முறையாக கையாயாவிட்டால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.

இதன்போதே சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என சுட்டிக்காட்டிய ஜி ஜின்பிங், அது சரியாகக் கையாளப்பட்டால் இரு தரப்பு உறவு ஸ்திரத்தன்மையை அனுபவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லையேல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்றும் ஜி ஜின்பிங் கூறினார் என சீன அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles