நில உரிமைகோரி மலையக சிறுவன் நடைபயணம்!

தலவாக்கலை பி.கேதீஸ்

மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நில உரிமை கோரி, ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 11 வயது சிறுவன் ஒருவர் இன்று (20) காலை தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு தனது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

லிந்துலை, மௌசாக்கலைச் தோட்டத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் கார்த்தி என்ற 11 வயது சிறுவன், தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து சாதனை படைக்கும் நோக்கத்தில் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மகன் நன்றாக நடந்து செல்வார் என்றும், இதற்கு முன்பும் நடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார் என்றும் மலையக மக்கள் இந்த நாட்டிற்கு வந்து சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் இன்றும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர் என்றும் அச்சிறுவனின் தந்தை சுப்பிரமணியம் பிரேம்ராஜ் தெரிவித்தார்.

மக்களால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத நில உரிமைப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதும், தலவாக்கலையிலிருந்து கொழும்புக்குக் குறுகிய நேரத்தில் நடந்து சென்று சாதனை படைப்பதுமே இந்தப் பேரணியின் நோக்கங்களாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவன் தனது நடைப்பயணத்தைத் தொடங்குவதைக் காண தலவாக்கலையில் அதிகளவான மக்கள் கூட்டம் கூடியதை அவதானிக்க முடிந்தது. மேலும், தலவாக்கலை நகர மக்கள் கேக் வெட்டி, சிறுவனின் உறுதியான நடைப் பயணத்தைப் பாராட்டினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles