மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்துமாறு சபாநாயகரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைiயை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் இன்று, சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் , வி. ராதாகிருஷ்ணன் மற்றும் எதிரணி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க ஆகியோர் சபாநாயகர் அலுவலகத்துக்கு சென்று பிரேரணையை ஒப்படைத்தனர்.










