தவெக அரசின் 23 அமைச்சர்கள் பதவியேற்பு!

தமிழ் நாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர்.

அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா ஆரம்பமானது.

விஜய் முதல்வராக பதவியேற்றபோதும் கூட முதலில் வந்தே மாதரம் பின்னர் தேசிய கீதம் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து என்று இசைக்கப்பட்டு அதற்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியிலும் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வராக கடந்த மே 9-ம் திகதி விஜய் பதவியேற்றார்.

அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், இன்று 23 பேர் அமைச்சர்களாக, பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் விபரம் வருமாறு ,

1. ஸ்ரீநாத் – தூத்துக்குடி எம்எல்ஏ,

2. எஸ்.கமலி – அவிநாசி,

3. சி.விஜயலக்ஷமி – குமாரபாளையம்,

4. ஆர்.வி.ரஞ்சித் குமார் – காஞ்சிபுரம்,

5. வினோத் – கும்பகோணம்,

6. ராஜீவி – திருவாடானை,

7. பி.ராஜ்குமார் – கடலூர்,

8. வி.காந்திராஜ் – அரக்கோணம்,

9. மதன்ராஜ்.பி – ஒட்டப்பிடாரம்,

10. ஜெகதீஸ்வரி.கே – ராஜபாளையம்,

11. ராஜேஷ்குமார்.எஸ் – கிள்ளியூர்,

12. விஜய்பாலாஜி.எம் – ஈரோடு கிழக்கு,

13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி – ராசிபுரம்,

14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ – சேலம் தெற்கு,

15. ரமேஷ் – ஸ்ரீரங்கம்,

16. பி.விஸ்வநாதன் – மேலூர்,

17. குமார்.ஆர் – வேளச்சேரி,

18. தென்னரசு.கே – ஸ்ரீபெரும்புதூர்,

19. சம்பத்குமார்.வி – கோவை வடக்கு,

20. முகமது பர்வாஸ்.ஜே – அறந்தாங்கி,

21. டி,சரத்குமார் – தாம்பரம்,

22. மரிய வில்சன் – ராதாகிருஷ்ணன் நகர்,

23. விக்னேஷ்.கே

இத்துடன் தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரம் பெற்றுள்ளது. இது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Related Articles

Latest Articles