இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் உயிரிழந்துள்ளனர்.357 வீடுகள் பகுதியளவும், 8 வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 912 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 845 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.










