தேசிய அரசு அமையபோகிறது என்பது கட்டுக்கதை!

“தேசிய அரசாங்கம் அமைப்பதற்குரிய முயற்சி இடம்பெறுவதாக வெளியாகும் தகவல்கள் அப்பட்டமான பொய்யாகும்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு முயற்சி இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் நிமித்தமே மஹிந்த சமரசிங்க, தூதுவர் பதவியை துறந்து இலங்கை வருகின்றார் எனவும், ஹர்ஷ டி சில்வா போன்றவர்களுடன் பேச்சு நடத்தப்படுவதாகவும் சில இணைய ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பில் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

“ தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் பேச்சு நடத்தப்படவில்லை. இது நூறு சதவீதம் பொய்யான தகவலாகும்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எதிரணி தரப்பில் போலி தகவல்கள் பரப்படுகின்றன. அந்த தகவலிலும் உண்மை இல்லை.

சவாலை எதிர்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்குரிய இயலுமை எமக்குள்ளது.” என்றார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்.

Related Articles

Latest Articles