நாட்டில் இன்றும் மழை!

இன்றைய காலநிலை பற்றிய அறிவித்தல்!

நாட்டைச் சுற்றி தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இப்பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மதியம் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் ஆக காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேசன்துறையிலிருந்து சிலாபம் வரையான மன்னார் ஊடாக மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான அம்பாந்தோட்டை ஊடாக கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவுக் கொந்தளிப்பாகக் காணப்படும்.

அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் அலையின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related Articles

Latest Articles