இறுதிச் சடங்கின்போது வெளிவந்த அதிர்ச்சி; மொனராகலையில் சடலம் மாறிய துயரம்!

படல்கும்புர, அலுப்பொத பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் சடலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உறவினர்கள் நேற்று வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பொறுப்பேற்று, படல்கும்புர நோக்கிப் புறப்பட்டனர்.

வீட்டிற்குச் சென்றதும் இஸ்லாமிய மத முறைப்படி சடலத்தைக் குளிப்பாட்டுவதற்குத் தயாரான போதே, அது அந்தப் பெண்ணின் சடலம் அல்ல என்பதும், வேறொரு ஆணின் சடலம் என்பதும் கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அந்த ஆணின் சடலத்தை மீண்டும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்னரே, உயிரிழந்த பெண்ணின் உண்மையான சடலம் உரிய முறையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் நேற்றைய தினம் மத வழிபாடுகளின்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. வைத்தியசாலையின் இந்த அலட்சியப் போக்கால், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கடும் அசெளகரியத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles