மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!

மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட தேசிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மந்தாரினா ஹோட்டலின நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மலையக மக்களின் தற்போதைய வாழ்வாதார, சமூக சவால்கள் குறித்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் களப்பணி ஆய்வுகளின் விரிவான அறிக்கை மற்றும் அதற்கான பரிந்துரைகள் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் பிரதான அம்சமாக, மலையகத் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் சார்பில் விரிவான களப்பணி ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களான சட்டத்தரணி பாலசந்திரன் கௌதமன் மற்றும் எஸ். பிரபாகரன் ஆகியோரால் விசேட விளக்கக்கட்சியொன்று முன்வைக்கப்பட்டது.

கல்வி, தொழிலாளர் உரிமைகள், வறுமை ஒழிப்பு, மொழி உரிமைகள் மற்றும் அரச சேவைகள் ஆகிய ஐந்து பிரதான துறைகளை உள்ளடக்கி அவர்களால் இதன் போது பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும் இதன் போது நிலம் மற்றும் ‘வீட்டுரிமை – மூலோபாயக் கொள்கை தலையீடுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள்’ மற்றும் ‘அரசு சேவைகள், சுகாதாரம் மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கான அணுகலை வலுப்படுத்துவதற்கான கொள்கை தலையீடுகள்’ ஆகிய தலைப்புக்களின் கீழான கலந்துரையாடல் அமர்வு ஆணைக்குழுவின் ஆணையாளர்களான நிமால் ஜி. புஞ்சிஹேவா மற்றும் கலாநிதி ஜெஹான் குணதிலக்க ஆகியோரின் நெறியாழ்கையில் இடம்பெற்றது.

இதேபோன்று ‘தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை மட்ட தலையீடுகள்’ மற்றும் ‘பெருந்தோட்ட சமூகங்களில் தரமான மற்றும் சமத்துவமான கல்வியை மேம்படுத்தல்: கொள்கை முன்னுரிமைகள் மற்றும் தலையீடுகள்’ என்ற தலைப்புக்களிலான கலந்துரையாடல் அமர்வு ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களான பேராசிரியர் பர்சானா ஹனீபா மற்றும் பேராசிரியர் டி. தனராஜ் நெறியாள்கையில் நடைபெற்றது.

நன்றி – வீரகேசரி

(எம்.மனோசித்ரா)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles