மாகாணசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கைதவிர ஏனைய இடங்களில் வெல்வோம்

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் 3 சதவீதத்துக்கு இறங்கிவிடுவோம் என அரசாங்கம் அஞ்சுகின்றது. அதனால்தான் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.

தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் நாம் போட்டியிடுவோம். வடக்கு,கிழக்கு பகுதிகளில் எல்லாம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லை.

தற்போதைய நிலைவரப்படி ஏனைய சபைகளில் ஐந்து சபைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி அமைக்கும். எமது தலைமையிலான கூட்டணியே மாகாணசபைத் தேர்தலில்வெற்றிபெறும்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles