நாட்டில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயினால் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் இருந்தாலும் மேல் மாகாணத்திலேயே நிலைமை மோசமாக உள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 30 ஆயிரத்து 253 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மொத்த பாதிப்பில் 52.46 சதவீதமாகும் என சுகாதார அமைச்சின் தரவுகளில் இருந்து அறியமுடிகின்றது.
நாட்டில் 124 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளில் டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.










