800 கிலோ கழிவு தேயிலையுடன் மூவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் 800 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை – அல்பியன் பகுதியிலிருந்து கம்பளை நோக்கி வேனில் கழிவுத் தேயிலை கொண்டுசெல்லப்படுவதாக, அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, வேன் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போதே, வேனில் வைக்கப்பட்டிருந்த 800 கிலோ கிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வேனில் பயணித்த மூவர், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles