நாட்டில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 7 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 06 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 62 ஆயிரத்து 422 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் 3ஆயிரத்து 903 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 683 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே 32 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.51 சதவீதமாகும்.
142 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு, அதி அபாய டெங்கு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.











