நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (07) விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி விவாதிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 4 மணிநேர விவாதம் கோரி இருந்தார்.
எனினும், ஆளுங்கட்சியால் 3 மணிநேரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை, சிறைச்சாலை மோதல் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.










