இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதர் சிலை சீதுவையில் திறப்பு

இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதரின் திருவுருவச் சிலை ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் விசேட நிகழ்வு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று நடைபெற்றது.

சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 60 அடி உயரமுடையது. அத்துடன் இது பொதுமக்களின் வழிபாட்டிற்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை இரும்பினால் (white iron) உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை, பேராயரால் ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

சுபுவன் அரணவின் நிர்வாகியான அருட்தந்தை டெரெல் (Rev. Darrel) அவர்களின் கலைக் கருத்தாக்கத்திற்கு அமைய இச்சிலை வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பௌத்த துறவிகள், கத்தோலிக்க குருக்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles