இஸ்ரேல் உளவாளிகளை குறிவைத்து ஈரான் கைது வேட்டை: 21 பேர் சிக்கினர்

ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்துடன் தொடர்புடைய 21 நபர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு கெர்மான் மாகாணத்தில் பிடிபட்ட இந்த நபர்கள், அந்நாட்டு இராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரித்து வெளிநாட்டிற்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அரசு ஊடகங்கள் வெளியிட்ட இந்தத் தகவலின்படி, இவர்கள் அனைவரும் இஸ்ரேலின் கூலிப்படையினராகச் செயல்பட்டதாக ஈரான் அரசு குறிப்பிடுகிறது.

இராணுவப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உளவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles