நானுஓயாவில் வீதி தாழிறக்கம்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருகின்றது. இந்நிலையில் நுவரெலியா – தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அருகில் வீதி நடுவில் திடீரென தாழிறங்கியுள்ளது.

இதன் காரணமாக குறித்த இடத்தில் போக்குவரத்து ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் மேலும் இதற்கு முன்னரும் இதே இடத்தில் தாழிறக்கம் ஏற்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர் மழைகாரணாமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள், பிரதான வீதியில் வெடிப்புக்கள் உள்ளதால் வீதியினை சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் நானுஓயா பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது

அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னால் வீதி தாழிறக்கம் அல்லது குழிவான பள்ளம் உள்ளதை எச்சரிக்கும் அபாய எச்சரிக்கை வீதிச் சமிக்ஞைகள் ஏதும் இல்லாததால் குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வேகத்தைக் குறைகவே அல்லது அதிக வேகத்தில் இப்பகுதியைக் கடக்கும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

செ.திவாகரன்

Related Articles

Latest Articles