ஜப்பான் பிரதமர் குறித்து இரட்டை அர்த்த பேச்சு; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார்.

முன்னர் ஒளிபரப்பான இணைய ஒலிபரப்பு (Podcast) வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

அந்த வீடியோவில், வெளிநாட்டுப் பயணங்களின் போது தமக்குக் கிடைத்த மிக “மோசமான பரிசு” எது என்று அல்பானீஸிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்திருந்த ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி தமக்கு ஒரு ‘ராயல் மெலன்’ (Royal Melon – தர்பூசணி போன்ற ஒரு வகை பழம்) பரிசளித்ததாகக் கூறினார்.

அந்தப் பரிசு “சற்று விசித்திரமாக இருந்தாலும், சுவையாக இருந்தது” என்று கூறிய அல்பானீஸிடம், தாகைச்சி அந்தப் பழங்களை எப்படி ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டுவந்தார் எனத் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த அவர், “எனக்குத் தெரியாது, ஆனால் அவர் இரண்டு மெலன்களைக் கொண்டுவந்தார்…” எனக் கூறித் தன் நெஞ்சிற்கு நேரே இரு கைகளையும் நீட்டிச் சைகை செய்தார்.

அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நிக்கி ஆஸ்போர்ன், ஜப்பான் பிரதமரின் உடலமைப்பைக் கேலி செய்யும் வகையில் பேசினார். ஆனால், அல்பானீஸ் அதைத் தடுக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை.

கடந்த ஜூலை மாதம் ஒளிபரப்பான இதே நிகழ்ச்சியில்தான், பிரபல பாடகி கைலி மினோக் குறித்து அல்பானீஸ் பேசிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் அதற்கு அல்பானீஸ் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.

தற்போது, ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் ஜப்பானிய தூதர் ஷிங்கோ யமகாமி (Shingo Yamagami) எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில், பிரதமர் அல்பானீஸின் இந்த பேச்சை “பாலின ரீதியான கேலி” (Sexist) என்றும், “நன்றியற்ற செயல்” என்றும் விமர்சித்துள்ளார்.

“எவ்வளவு நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவுடனான நட்புறவை பெரிதும் மதிக்கும் ஜப்பானிய மக்களால் இந்த ஜோக் என்றென்றும் நினைவுகூரப்படும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த அக்டோபரில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்ற தாகைச்சி, ஏற்கனவே இதுபோன்ற பல உடல் சார்ந்த கேலிகளைச் சந்தித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைப் பிடித்துக்கொண்ட ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் கெய்லர் (Angus Taylor), பிரதமர் அல்பானீஸ் ஜப்பான் பிரதமரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், தங்களின் பேச்சில் எந்தவித இரட்டை அர்த்தமும் அல்லது உள்நோக்கமும் இல்லை என அல்பானீஸின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles