ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (12) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பிலேயே இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










